சர்ச்சையில் 'இந்திரவிழா'
- 17.05.2008
By JBR
உறவு மீறல்கள், பாலியல் சிக்க்கள், நினைத்ததை சாதிக்க உடம்பையே மூலதனமாக்கும் பெண் என, கே.ராஜேஸ்வரின் 'இந்திர விழா' கதையிலேயே கான்ட்ராவர்ஸி ஏராளம் இருக்கிறது.
|
|
|
இப்போது இந்த கதையே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
ராஜேஸ்வரின் திறமையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ராஜ்குமார் சந்தோஷி படங்களுக்கே கதை, திரைக்கதை எழுதியவர். அப்படிப்பட்டவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது 'இந்திரவிழா'.
பத்திரிகைகளில் வெளிவந்த 'இந்திரவிழா' கதையை படித்த சிலர், ஹாலிவுட்டில் வெளியான டிஸ்குளோசர் படத்தின் உல்டா இது என புரணி பேசி திரிகின்றனர்.
மைக்கேல் டக்ளஸ், டெமிமூர் நடித்திருந்த டிஸ்குளோவுர் ஏறக்குறைய இதேபோன்ற கதைதான் என்றாலும், இது வேறு கதை என்கிறார்கள், 'இந்திரவிழா' குறித்து முழுதும் அறிந்தவர்கள்.
எப்படியோ படத்துக்கு இலவச விளம்பரம் கிடைத்து வருகிறது.
|