அண்ணாந்து பார்க்கிற உயரத்திலிருக்கும் அமீர்கானின் அலப்பறையை பாருங்கள் என்னதான் போட்டியிருந்தாலும் அட பொறாமையே இருந்தாலும் இப்படியா செய்வது?
விஷயம் இதுதான். தான் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ஷாருக் என்று பெயர் வைத்துள்ளார். கொஞ்சநாள் முன்பு, ஷாருக்கானை நெம்பர் டூ என கிண்டலடித்தார் அமீர்கான் (அதற்கு வட்டியும் கந்து வட்டியுமாக சேர்த்து கொடுத்தார் ஷாருக்). அந்த அலம்பல் அடங்குவதற்குள் இந்த சிலும்பல்.
அமீர்கான் வாங்கிய வீட்டை பராமரித்து வந்தவர்களின் நாய் அது. அவர்கள் வைத்த பெயர்தான் ஷாருக். வீட்டை வாங்கியபோது, நாயை எங்களுடன் விட்டுச் சென்று விட்டார்கள். இதற்கு நான் என்ன செய்வது என்று அப்பாவியாக இணையம் மூலம் கொட்டாவி விட்டிருக்கிறார் அமீர்.
ஷாருக்கிடமிருந்து மொத்தமாக மெத்து கிடைக்கும்போது அமீரின் சித்து விளையாட்டுகள் முற்று பெற்றுவிடும்.
|