இவர் இயக்குகிற படங்களின் நாயகிகள் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருப்பார்கள். முதல்பட நாயகி கொழுந்தன் மீது மோகம் கொண்டவர். இரண்டாவது பட நாயகி தலைப்பாகை கட்டி மரம் ஏறி, புருஷனை நெஞ்சில் மிதிப்பவர், மூன்றாவதாக 'சரித்திரம்' படத்தை இயக்கப் போகிறார் சாமி. இதில் வரும் நாயகி யானை வளர்ப்பவள். ஆண்களுடன் ஒண்டிக்கு ஒண்டி சிலம்பு சுற்றுகிறவள்.
ஆறடி உயரத்தில் கொஞ்சம் ஆம்பளதனத்துடன் நாயகி வேண்டும். அகில இந்திய அளவில் இதற்கு பத்மப்ரியாவை விட்டால் வேறு ஆள் ஏது?
பழைய 'பளாரை' மறந்து, பத்மப்ரியாவிடம் தூது அனுப்பினார் சாமி. அந்த ஆசாமிக்கெல்லாம் கால்ஷீட் கிடையாது என்று கன்னத்தை தடவியவாறு கதவடைத்து விட்டாராம் பத்மப்ரியா.
சாமிக்கோ சங்கடம் யானை வளர்க்கும் நாயகி கிடைத்தால் மட்டுமே சரித்திரத்தை ஸ்டார்ட் செய்ய முடியும். தான் சாமி என்பதை மறந்து பக்தன் ரேஞ்சுக்கு பத்திரிகை மூலமாக வரம் கேட்டு அடம் பிடிக்கிறார்.
கைலாய மலை பார்வதி வரம் கொடுத்தாலும் பத்மப்ரியா இறங்கி வருவது மகா கஷ்டம்!
|