படத்தில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் வேலைகள் அதிகம் இருப்பதால், அதன் தொழில்நுட்பம் அறிய ஒரு டீம் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளது.
சில நாட்களில் ஷங்கரும், ரஜினியும் அமெரிக்கா செல்கிறார்கள். இந்தப் பயணம் இளமை ரஜினியை திரையில் கொண்டு வருவதற்காக.
'சிவாஜி'யில் அழகுக்கலை நிபுணர்களும், காஸ்ட்லி அழகுச் சாதனங்களும் ரஜினியின் வயதை கணிசமாக குறைத்து காட்டின. 'ரோபோ'வில் இன்னும் குறைய வேண்டுமாம், அதற்காகவே இந்த அமெரிக்கப் பயணம்.
'ரோபோ'வில் ரஜினி இதுவரை இல்லாத அளவிற்கு, சரியாகச் சொன்னால் கமல் ரேஞ்சுக்கு கெட்டப் சேஞ்ச் பண்ணுகிறாராம். கதைக்காகவே இந்த மாற்றம்.
அமெரிக்காவில் ஹாலிவுட் கலைஞர்களின் கைவண்ணத்தில் ரஜினியின் தோற்றம் மாறப் போகிறது. ஒருவகையில் இந்தப் பயணம் ஒரு போட்டோசெஷன். ஷங்கர் ரஜினி என்பதால் கொஞ்சம் காஸ்ட்லி அவ்வளவுதான்!
|