சூர்யாவை வைத்து கவுதம் ஆரம்பித்த 'வாரணம் ஆயிரம்' வாரணம் பத்தோடு நிற்கிறது. சூர்யா 'வேல்' படத்துக்கு போய் விட்டதால் ஏற்பட்ட இடைவெளி இது. 'வேல்' முடிந்தபிறகே வாரணத்துக்கு திரும்புவாராம் சூர்யா. அதற்கு இன்னும் ஆகிவிடும் பல மாதங்கள்.
அதுவரை சும்மா இருப்பானேன் என்று புதுப் புராஜெக்டில் இறங்கியுள்ளார் கவுதம். இவரது போட்டோன் பேக்டரி தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் குறைந்தகால புராஜெக்டாம் இது.
'மின்னலே' தொடங்கி 'வாரணம் ஆயிரம்' வரை இவரது அனைத்துப் படங்களுக்கும் இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் அறிமுகமானதே 'மின்னலே' படத்தில்தான். இந்த கூட்டணி முதல்முறையாக இந்தப் படத்தில் பிரிகிறது. கவுதமின் புதிய படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறாராம்.
படத்தின் மற்றுமொரு ஹைலைட், முக்கியமான கேரக்டரில் தோன்றுகிறாராம் த்ரிஷா. வழக்கம்போல இதுவும் க்ரைம் த்ரில்லராக இருக்கும் என்கின்றன ஸ்டுடியோ வட்டாரங்கள்.
எனினும் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் கவுதம் வந்தபிறகே தெரியும்.
|