'சிவாஜி' பேட்ஜ் வொர்க்கின்போது அருகில் 'தசாவதாரம்' ஷுட்டிங் நடப்பதை அறிந்து அங்கு சென்று கமலுடன் உரையாடினார் ரஜினி. கமலின் பலவித கெட்டப்புகளின் புகைப்படங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர் அவரை மனப்பூர்வமாக பாராட்டினார்.
'சந்திரமுகி' 804-வது நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்டு ரஜினியை வாழ்த்தினார் கமல். இந்நிலையில் மீண்டும் இருவரும் நேற்று சந்தித்தனர்.
சென்னை பிலிம் சிட்டியில் 'தசாவதாரம்' படத்துக்காக வெள்ளை மாளிகை போன்ற பிரமாண்ட அரங்கு போடப்பட்டுள்ளது. நேற்று முதல்முறையாக அதில் ஷுட்டிங் நடத்தப்பட்டது. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் மூன்று மேக்கப் நிபுணர்கள் கமலை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷாக மாற்றத் தொடங்கினர். காலை 9 மணிக்கு கமலின் தோற்றம் முற்றிலுமாக மாறியது. ஜார்ஜ் புஷ் தோற்றத்தில் இருந்த கமலை வைத்து வெள்ளை மாளிகை அரங்கில் காட்சிகளை ஷுட் செய்தார் கே.எஸ். ரவிக்குமார்.
இந்த விவரங்களை கேள்விப்பட்ட ரஜினி காலை 11 மணியளவில் பிலிம்சிட்டிக்கு வந்து வெள்ளை மாளிகை அரங்கை பார்வையிட்டார். பின் கமலை கட்டித் தழுவி வாழ்த்தினார். இருவரும் முப்பது நிமிடங்கள் தனிமையில் பேசிக் கொண்டனர்.
இந்த அரங்கத்தை காண வந்த மற்றொரு வி.ஐ.பி. டேவிட் ஹுப்பர். அமெரிக்க தூதரக அதிகாரி. இவர் இந்திய சினிமா தொழில் குறித்த கருத்தரங்கிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
|