டென்மார்க்கில் ஆசிரியர் பணியாற்றி வரும் இவரது பூர்வீகம் ஈழம். கனியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்...' வரிகளின் உன்னதத்தையும் உண்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு கதையையே 'இளம்புயல்' படத்தின் கருவாக்கியுள்ளாராம்.
படத்தின் கதாநாயனும் இசையமைப்பாளருமான வஸந்த், இயக்குனரின் புதல்வர்தானாம். இவருக்கு ஜோடியாக பூர்ணிதா நடிக்க, கருணாஸ், ஸ்ரீமன், சுஜிபாலா என கோடம்பாக்க நட்சத்திர கூட்டமும் படத்தின் பட்டியலை நீட்டுகிறது.
தொண்ணூறு சதவீத படப்பிடிப்பு டென்மார்க்கிலேயே நடத்தப்பட்டுள்ளது. சில காட்சிகள் மட்டும் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
வஸந்தின் கைவண்ணத்தில் படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஆறு. அத்தனையும் அறுசுவையாக இருக்கும் என்னும் இயக்குனர், "பாடல் வெளியாவதற்கு முன்பாகவே வெளிநாட்டு தமிழர்கள் பலர் பாடல்கேசட்டிற்கு முன் பதிவு செய்துவிட்டனர். ஆடியோ வியாபாரமே குறைந்துபோன இந்த காலகட்டத்தில் பல ஆயிரம் கேசட் விற்பனையாவது சாதனைதானே" என பெருமிதம் கொள்கிறார்.
படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நாளை மாலை நடைபெறவுள்ளது. பாடல்களை தொல்.திருமாவளவன் வெளியிட இயக்குனர் அமீர் பெற்றுக் கொள்கிறார்.
|