கமல், ரஜினி, ஜாக்கிசான் - பச்சக் குதிர கிராபிக்ஸ்
- 18.02.2006
By JBR
பார்ப்பவர்கள் திணறும் அளவுக்கு படம் நிறைய லொள்ளு, குடம் நிறைய நமிதா என்னும் கள்ளு - இந்த பிப்டி பிப்டி பார்முலாவில் தயாராகிறது பார்த்திபனின் பச்சக் குதிர!
|
|
|
படத்தில் பார்த்திபன் ஓட்டிச்செல்லும் மோட்டார் சைக்கிளை குதிரைபோல, பழைய உடைந்து போன பொருள்களை வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இதுபோல பச்சக் குதிரயில் மனதில் பச்சக் என்று பதியும் காட்சிகள் நிறைய! அதில் ஒன்று கமல், ரஜினி, ஜாக்கிசான், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் இடம்பெறும் காட்சி.
இத்தனை நடிகர்களை ஒன்று சேர்க்கும் வேலையை கிராபிக்ஸ் கலைஞர்களிடம் கொடுத்திருக்கிறார் பார்த்தி. இவர்களை வைத்து எடுக்கப்போகும் காட்சி மட்டும் இவரது சொந்த சரக்கு.
சமீபமாக தனது படங்களில் பாப்புலர் கேரக்டர்களை இமிடேட் செய்வதை ஒரு பாலிசியாக வைத்திருக்கிறார் சத்யராஜ். இதனை பச்சக் குதிரயில் தொடர்கிறார் பார்த்திபன்.
இந்தப் படத்தில் நமிதா மாடர்ன் ட்ரெஸ் போடாமல்... (சே! முடிக்கிறதுக்குள்ள ஜொள்விடாதீங்க.) மாடர்ன் ட்ரெஸ்ஸுக்கு பதில் முழுசா சேலைகட்டி வர்றாங்களாம்.
நமிதா எதை கட்டினாலும் அது கவர்ச்சியாகவே இருக்கும் என்பதால்... டோண்ட் ஒர்ரி!
|