முதல் முறையாக பிதாமகனை இந்தியில் ரீ-மேக் செய்ய சில முயற்சிகள். பாலாவின் படம் இந்தி செல்வது இது முதல் முறையல்ல. 'சேது' படம் 'தேரே நாம்' பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. விக்ரம் வேடத்தில் நடித்த சல்மான்கானுக்கு 'தேரே நாம்' வெற்றிப்படமாக அமைந்தது.
பிதாமகனை இந்தியில் தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. பாலிவுட் தயாரிப்பாளருடன் இணைந்து பாலா தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது. விக்ரம் நடித்த சித்தன் வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் அஜய்தேவ்கான். சூர்யா வேடத்தில் அபிஷேக் பச்சன். அவர் நோ சொல்லும் பட்சத்தில் வேறோருவர்.
இந்தி பிதாமகனை ஒளிப்பதிவாளர் திரு இயக்குவார் என தெரிகிறது. இயக்குனராக திருவுக்கு இது முதல் படம். வெற்றிபெற வாழ்த்துவோம்!
|