அதற்காகவே ஸ்பெஷலாக தயாராகிறது குசேலன் பேருந்து. அது என்ன குசேலன் பேருந்து?
இந்த ஒருவரி கேள்விக்கு ஓராயிரம் ஆச்சரியமான பதில்கள். இந்தப் பேருந்தில் ரஜினியின் வித்தியாசமான கெட்டப்புகளில் அமைந்த படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். ஹைடெக் வசதிகள் நிறைந்த இதில் காதை உறுத்தாத ஸ்பீக்கர்கள் உண்டு. குசேலன் பாடல்கள் இதில் கசிந்து கொண்டிருக்கும்.
சென்னை மாநகரில் ஓடும் இந்தப் பேருந்து சில இடங்களில் மட்டுமே நிற்கும். அது நிற்கும் இடங்களில் நீங்கள் இருந்தால், நாங்கள் அதிர்ஷ்டசாலி. பேருந்தினுள் சென்று, ரஜினியின் அபூர்வமான படங்களை கண்டு களிக்கலாம்.
இந்த விளம்பர பேருந்தை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த கொடியசைப்பு விழாவில் ரஜினி நீங்கலாக மற்ற அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
குசேலன் ஆடியோ உரிமை இரண்டரை கோடிக்கும், படத்தின் உரிமை அறுபது கோடிக்கு விலைபோயுள்ளது. அதனை வட்டியோடு வசூலிக்கவே இந்த விளம்பரமும் குசேலன் பேருந்தும்!
|