'வாரணம் ஆயிரம்' தந்தை மகன் உறவை சொல்லும் படம். இளைஞன் முதல் முதியவர்வரை பல்வேறு வயது தோற்றங்களில் சூர்யா நடித்துள்ளார். மிகுந்த பொருட் செலவில் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரி்ததுள்ள இப்படத்துக்கு இசை, ஹாரிஸ் ஜெயராஜ்.
ரம்யா மற்றும் சமீரா ரெட்டி இருவரும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இன்னொரு ஜோடி சிம்ரன். இவருக்கு வயதான வேடம் என்கிறார்கள்.
படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. ஒரேயொரு பாடல்காட்சி மட்டுமே பாக்கி சூர்யா, சிம்ரன் இடம்பெறும் இப்பாடல்காட்சி, இளமை நினைவுகளின் தொகுப்பாக எடுக்கப்பட உள்ளது.
வாரணம் ஆயிரம் படத்தை இயக்கி்க கொண்டே தனது 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம். போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் முடிந்து 'வாரணம் ஆயிரம்' ஆகஸ்டில்திரைக்கு வருகிறது. அக்டோபர் நவம்பரில் 'சென்னையில் ஒரு மழை'க்கலத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
|