தோவாவின் குரலில் 'காதலே நிம்மதி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் கிர்ரடிக்கும். இந்தப் பாடலை பாடும்முன் தேவாவின் ஹிட் லிஸ்டில் இடம் பெற்ற பாடல், 'காதல் கோட்டை'யில் வரும், 'கவலைப்படாதே சகோதரா....'.
தேவா பாடிய இந்த இரு பாடல்களும் இடம்பெற்ற படங்களை தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் 'சூரியன் சட்டக்கல்லூரி'யிலும் பட்டையைக்கிளப்பும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் தேவா.
"காதல் பண்ணப் போறியா... கத்து தர்றேன் வாறியா..."
என்ற அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. அப்பா எட்டடி என்றால் பிள்ளை பதினாறு என்பதுதானே உலக கணக்கு. இந்தப் படத்தில் அப்பாவை பாடவிட்டு, திரையில் ஆடியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ஏற்கனவே ஓரிரு படங்களிலும் இவர் மைக் பிடித்து பாடுவதுபோல் நடித்திருந்தாலும் ஆடுவது இதுதான் முதல்முறை.
அப்பா குரலைக் கேட்டால் ஆட்டம் பிய்த்துக் கொண்டு வரும்!
|