ஜொலிக்கும் ஜெனிலியா - வியர்க்கும் நடிகைகள்
- 19.07.2007
By JBR
ஜெனிலியா டிசோஸா! இருபது வயது இளமை பூகம்பம். பாய்ஸில் ஆரம்பமானது இவரது சினிமா கேரியர். படம் சரியாக போகாததால் ஜெனிலியாவும் புறக்கணிக்கப்பட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சினில் ரீ-என்ட்ரி. ஏதோ பரவாயில்லை. அடுத்து சென்னை காதல். முதலுக்கே மோசம்!
|
|
|
மூன்று படங்களை வைத்து ஜெனிலியா ராசியில்லாதவர் என முத்திரை குத்தியது கோடம்பாக்கம். அதையும் மீறி சக நடிகைகளின் வயிற்றில் புளியை கரைப்பவராக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக 'வாரணம் ஆயிரம்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெனிலியா. இதனைத் தொடர்ந்து ஜெயம்ரவி ஜோடியாக 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் நடிக்கிறார். இரண்டுமே பெரிய ப்ராஜெக்ட்ஸ், பெரிய ஹீரோஸ்.
ஜெயம்ரவி, எம். ராஜா காம்பினேஷன் இதுவரை தோற்றதில்லை. இவர்கள் படத்தில் நடித்த சதா, அசின், ஸ்ரையா என அனைவரும் உச்சத்தில் உள்ளனர். இந்த அதிர்ஷ்டம் தனக்கும் அடிக்கும் என ஜெனிலியா நம்புகிறார். அவரைவிட அவரது போட்டி நடிகைகள் நம்புகின்றனர்.
தெலுங்கில் டல்லடித்த ஜெனிலியாவின் மார்க்கெட் 'பொம்மரிலு',' டி' படங்களின் தொடர் வெற்றியால் சூடு பிடித்துள்ளது. 'பொம்மரிலு' படமே 'சந்தோஷ் சுப்ரமணியமா'க தமிழ் பேசுகிறது. இதில் தெலுங்கில் நடித்த அதே வேடத்தில் ஜெனிலியா நடிக்கிறார். தெலுங்கைப் போல தமிழிலும் படம் ஹிட்டாகும், இங்கேயும் மார்க்கெட் சூடுபிடிக்கும் என அவர் நம்புவதில் அர்த்தமுள்ளதால் பிற நடிகைகளிடம் பிரகாசம் குறைந்துள்ளது.
|