அலிபிரி மூவி புரொடக்ஷ்ன் சார்பாக திருப்பூர் எம்.வி.ராமசாமி தயாரிக்கும் படம் 'அடடா என்ன அழகு'. டி.எம்.ஜெயமுருகன் இயக்கம். ஜெய் ஆகாஷ் ஹீரோ. ஹீரோயின் புதுமுகம் நி்க்கோல்.
நமிதாவை போல் கிளாமர் நடிகையாக வேண்டுமென்பது நி்க்கோலின் ஆசை. அதற்கேற்ப ஆடைக்குறைப்பில் சத்தமில்லாமல் புரட்சி செய்து கொண்டிருக்கிறார் அம்மணி.
இந்நிலையில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் பீதியில் கோபமாக வெளியேறினார். ஹீரோ ஜெய் ஆகாஷ் தன்னை ஆபாசமாக திட்டியதாக காரணம் சொன்னவர், படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அதனை புறக்கணித்தார்.
விஷயம் தயாரிப்பாளர்கள் சங்கம்வரை சென்றது. இருதரப்பையும் அழைத்து பஞ்சாயத்து பேசி, நிக்கோலை சமாதானப் படுத்தினர். அதனைத் தொடர்ந்து 'அடடா என்ன அழகு' படத்தில் தொடர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்தார் நிக்கோல்.
கவர்ச்சியில் கிடைத்த விளம்பரத்தைவிட இந்த கான்ட்ரவர்ஸியால் கிடைத்த விளம்பரம் அதிகம் என்பதால், சந்தோஷமாகவே காணப்படுகிறார் நிக்கோல்.
|