Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ரோபோ சிக்கல் தீர்ந்தது
- 19.07.2008

By JBR
ரோபோ இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் ஆயிரம் பிரச்சனைகள், வதந்திகள்.

Shankar

ரஜினி, ஷங்கர் என இரண்டு பழுத்த மரங்கள் இருப்பதால் இத்தனை கல்லடியும், சொல்லடியும்!

சில நாட்கள் முன்பு ரோபோ கதை திருடப்பட்டதாக திகில் வதந்தி ஒன்றை கிளப்பினார்கள் சிலர். உண்மையைவிட இந்த வதந்தி நம்பத் தகுந்ததாக இருந்ததால் ஷங்கர் அலுவலகத்திலும் பீதியின் நிழல்.

விஷயம் இதுதான். இந்தியில் 'லவ் ஸ்டோரி 2050' என்ற பெயரில் ஒருபடம் தயாரானது. கால எந்திரத்தின் மூலம் 2050-ம் ஆண்டுக்கு செல்லும் காதல் ஜோடி ஒன்றின் கதை. பிரிந்த காதலர்களை ரோபோ ஒன்று சேர்த்து வைக்கும்.

Rajinikanth

படத்தின் கதை வெளியானதும், ஷங்கரின் ரோபோ கதைதான் இது. அவர் இந்தி படவுலகை சேர்ந்த சிலருக்கு கதை சொன்னபோது, எப்படியோ லீக்காகி 'லவ் ஸ்டோரி 2050' என்ற பெயரில் எடுத்துவிட்டனர் என கிளப்பி வி்ட்டனர். ஷங்கர் தரப்பில் இதற்கு மவுனமே பதிலாக அமைய, வதந்தியை உண்மை என்றே நம்பினர்.

ஆனால், இந்திப் படத்தின் கதைக்கும் ரோபோவுக்கும் சம்பந்தம் இல்லையாம். முக்கியமாக லவ் ஸ்டோரி 2050 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இதனால் ஷங்கர் உள்பட அனைவருக்கும் நிம்மதி.

கதை வேறாக இருந்தாலும் லவ் ஸ்டோரி 2050 போன்ற Sci-Fi படத்தின் வெற்றி ரோபோ மீதான எதிர் பார்ப்பை குறைக்கும். ப்ரெஷ்னெஸ் மங்கிப் போகும். லவ் ஸ்டோரியின் தோல்வியால் இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us