மதுரையில் குறும்பட - ஆவணப்பட பயிற்சி பட்டறை
- 19.07.2008
By JBR
சென்னையை தொடர்ந்து மதுரையிலும் குறும்பட-ஆவணப்பட பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.
|
|
|
நிழல் இதழும், தமிழ்நாடு குறும்பட ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் குறும்பட ஆவணப்பட பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகின்றன. சினிமா மீதான அதீத மோகத்தை தகர்ப்பது, திரைப்பட கலைமீது ஆர்வம் உள்ளவர்களுக்கு அதுகுறித்து கற்பிப்பது, குறும்படங்கள்-ஆவணப்படங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தமிழக குறும்பட-ஆவணப்படங்களுக்கு நியாயமான கவுரவத்தை பெற்றுத்தருவது ஆகியவையே இந்தப் பயிற்சி பட்டறையின் நோக்கம் என்கிறார் நிழல் இதழின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசு.
ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி முதல் பதினான்காம் தேதிவரை மதுரையில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் திரைக்கதை, கேமரா, நடிப்பு, எடிட்டிங் உள்பட திரைக்கலையின் அனைத்து அம்சங்களும் கற்றுத்தரப்படும். செயல்முறை விளக்கத்துடன் என்பது முக்கியமானது.
சென்னையில் நடந்த பட்டறையில் பாலுமகேந்திரா, மிஷ்கின், பாலாசிங்கம் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பயிற்சிப்பட்டறை மாணவர்களுடன் தங்கள் அனுபவங்களை பகிரந்து கொண்டனர். மதுரை பட்டறையிலும் திரைத்துறையினர் பலர் கலந்து கொள்வதாக தெரிவித்தார் திருநாவுக்கரசு.
பட்டறையில் கலந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு பட்டறை நிர்வாகிகளே தங்கும் வசதி செய்து கொடுப்பார்கள். மேலும் தகவல்களுக்கு 9444 484865 என்ற எண்ணில் திருநாவுக்கரசை தொடர்பு கொள்ளலாம்.
|