டென்மார்கில் வசிக்கும் ஈழத்தமிழரான கே.எஸ்.துரை தயாரித்து இயக்கியுள்ள படம் 'இளம்புயல்'. இப்படத்தின் பாடல்கள் வெளியீ்ட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. பாடல்களை விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, இயக்குனர் அமீர் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் தயாரிப்பானர் ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் வஸந்த், நடிகர் ஷாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பட விழாக்களில் தனது பேச்சால் மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் அமீர், 'வாழ்த்துகள்' என்ற ஒற்றை வரியி்ல பேச்சை முடித்துக் கொள்ள பத்திரிகையாளர்களுக்கு ஷாக். சிறிது நேரம் கழித்து தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பேச ஆரம்பித்த அமீர் பொரிந்து தள்ள தொடங்கினார்.
"கடந்த சில தினங்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நான் கண்டனம் தெரிவித்ததுபோன்ற செய்தி பத்திரிகையில் வந்து அப்செட் ஆனேன். அதனால்தான் வாயைத்திறந்தால் வம்பு என்று பேசாமல் இருந்துவிட்டேன்" என காரணம் கூறி பேச்சைத் தொடர்ந்தார்.
"தமிழை மறக்காமல் அதனை வளர்ப்பதில் அக்கறை எடுத்துக்கொள்வதில் தமிழக மக்களைவிட ஈழத்தமிழர்கள்தான் ஆர்வம் காட்டுகின்றனர். பெர்லின் திரைப்பட விழாவுக்காக சென்றிருந்தபோது என்னைப்பார்க்க தினமும் ஈழத்தமிழர்கள் பலர் வந்தனர். அவர்கள் வற்புறுத்தலின் பேரில் ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு சென்றபோதுதான் அவர்களின் வலியும், வேதனையும் புரிந்தது. அவர்களின் உணர்வுகளை பதிவு செய்யும் வகையில் ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு படமெடுப்பேன் என்று அப்போதே உறுதி கூறியிருந்தேன். அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்" என்றார்.
|