முரளி- விஷ்வாவின் 'எங்க ராசி நல்ல ராசி'
- 19.07.2008
By Amalan
ஜி.ஆர்.வழங்க ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரி்க்கும் புதிய படம் 'எங்க ராசி நல்ல ராசி'.
|
|
|
'மனுநீதி', 'சவுண்ட் பார்ட்டி', 'காசு இருக்கணும்' படங்களுக்குப் பிறகு ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் முரளி - விஷ்வா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
'காசு இருக்கணும்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது 'ஆண்டாள் அழகர்' படத்தில் நடித்து வரும் விஷ்வா, அடுத்து நடிக்கும் படம் இது. நடிப்பு, நடனம், சண்டைப்பயிற்சி என கதாநாயகனுக்கு தேவையான அத்தனை திறமைகளையும் வளர்த்துக் கொண்டிரு்ககும் விஷ்வா, தன் முழுத்திறமையையும் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறாராம்.
கதாநாயகியாக ரிதிமா நடிக்கிறார். இவர் சாருலதா என்ற பெயரில் ஏற்கனவே சில படங்களில் நடித்தவர். மற்றும் லிவிங்ஸ்டன், எஸ்.வி.சேகர், ராதா ரவி, வினிதா, சின்னி ஜெயந்த், சார்லி, மோகன்ராம், ஜெயரேகா, விஜி, சுருளி மனோகர், சூர்யகாந்த், முத்துக்குமார், செல்லதுரை ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஆர்.நடிக்கிறார். ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் பழம்பெரும் நாடக நடிகர். 'மனுநீதி', 'சவுண்ட் பார்ட்டி' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த ஜி.ஆர்., காசு இருக்கணும் படத்தில் 'ராமாயி' என்ற பெண் வேடத்தில் நடித்திருந்தார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் இரட்டை இய்ககுனர்களான ரவிராஜா. 'ஜெயம்', 'கண்மணி உனக்காக', 'என் சகியே', 'இதயமே', 'கலக்குற சந்துரு', 'ஆறுமுக சாமி' போன்ற படங்களை இயக்கிய இவர்கள், முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கலக்கலான காமெடிப்படமாக 'எங்க ராசி நல்ல ராசி' படத்தை இயக்கி வருகிறார்கள். படத்தின் முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் காட்சி வரை ரசிகர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள் என்ற உத்திரவாதம் தருகிறார்கள் இய்ககுனர்கள்.
படத்தில் தேவாவின் இசையில் நான்கு பாடல்கள் இடம் பெறுகின்றன. நான்கு பாடல்களையும் நான்கு விதமாக மெட்டமைத்து படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்திருக்கிறாராம் தேவா.
"நீ எனக்கு வேஸ்ட்... உங்கக்கா எனக்கு டேஸ்ட்...
காலையில் உங்கம்மா எனக்குப் போட்டுத் தருவா பூஸ்ட்..."
என்ற பொன்னியின் செல்வன் எழுதிய கானாப்பாட்டு ஹிட்டாகும் வகையில் அமைந்திருக்கிறது. இப்பாடல் காட்சியில் முரளி, விஷ்வா, ரிதிமா பங்கு பெற மார்க்கெட்டில் படமாக்கப்பட்டது.
|