இந்தியில் அமிதாப்பச்சன் 'டான்' என்ற படத்தில் நடித்தார். அதை தழுவி தமிழில் ரஜினி நடித்த படம்தான் 'பில்லா'. பல வருடங்களுக்குப் பிறகு அமிதாப்பின் 'டான்' ரீ-மேக்கில் ஷாருக்கான் நடித்தார். அதேபோல் 'பில்லா' ரீ-மேக்கில் அஜித் நடித்தார். கொஞ்சம் குழப்பாமாக இருக்கிறதா? உங்களை முழுவதும் குழப்ப இன்னொரு செய்தி. பில்லாவின் மூலமான டான், ஆங்கில படமொன்றின் தழுவல!
நிற்க. விஷயத்திற்கு வருவோம். பலரும் திருப்பிப்போட்ட தோசையான 'பில்லா'வை தெலுங்கில் ரீ-மேக் செய்கிறார் இயக்குனர் மெஹர் ரமேஷ். அஜித் நடித்த வேடத்தில் பிரபாஸ். நயன்தாராவின் டூபீஸூக்கு வேறு நடிகைகள் இணையாவார்களா? அதனால் நயன்தாராவையே நடிக்க கேட்டார்கள். ஒருமுறை போட்ட உடையை மறுமுறை போடுவதில்லை என மறுத்து விட்டார் நயன்.
இப்போது அவருக்குப் பதில் 'இரண்டு' படத்தின் நாயகி அனுஷ்கா நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அனுஷ்கா டூ பீஸூக்கு ஓ.கே.சொல்லியிருக்கிறாராம்.
ஆனால் நயன்போல் வருமா!
|