ஸ்ரேயாவால் தடைபட்ட 'கந்தசாமி'
- 20.02.2008
By JBR
நேற்று முன்தினம் 'கந்தசாமி' படப்பிடிப்பு நடந்திருக்க வேண்டும். ஸ்ரேயாவின் கவனக்குறைவால் அது நடக்கவில்லை.
|
|
|
விக்ரம், ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கப்படுவதாக இருந்தது. விக்ரம், சுசி கணேசன் அனைவரும் தயார். குறிப்பிட்ட காட்சியில் விலை உயர்ந்த ஆடை ஒன்றை அணிந்து ஸ்ரேயா நடிக்க வேண்டும்.
மும்பையிலிருந்து வரும்போது கவனக் குறைவால் ஸ்ரேயா குறிப்பிட்ட ஆடையை எடுத்து வரவில்லை. இதனால், படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை. அனைத்தும் தயாராக இருந்தும் ஆடை இல்லாததால் பேக்கப் சொன்னார் சுசி கணேசன்.
மும்பையிலிருக்கும் ஸ்ரேயாவின் அம்மா குறிப்பிட்ட ஆடையுடன் விமானத்தில் சென்னை வருவதாக வாக்களித்திருந்தார். அதன்படி அவர் சென்னை வந்த பிறகே, தடைப்பட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
|