Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
மிஷ்கின் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'கி.மு.590'
- 20.08.2009
By Amalan
உண்மை 0 சதவீதமா 100 சதவீதமா என்று தெரியாவிட்டாலும் மிஷ்கின் இயக்கத்தில் கமல் நடிக்கப்போகும் படத்தின் தலைப்பாக பேசப்பட்டு வரும் 'கி.மு.590' வித்தியாசமாகவே தோன்றுகிறது.
கடந்த ஒரு மாதத்தி்ற்கு முன் கமல் எடுத்த முடிவுதான் இது. மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தையும் 'நந்தலாலா'வின் சில காட்சிகளையும் பார்த்துவிட்டு மிஷ்கினை பக்கம்பக்கமாக பாராட்டி தள்ளியிருக்கிறார் கமல். பாராட்டோடு விடாமல் ஒரு வெகுமதியையும் கொடுத்து கௌரவித்துள்ளார். அந்த வெகுமதி வேறொன்றுமல்ல. தன்னை வைத்து ஒரு படம் இயக்கச்சொல்லி தந்த வாய்ப்புதான்.
இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை கமல். தொலைக்காட்சி நிறுவன முக்கிய புள்ளி ஒருவருக்கு போன் செய்து 'நந்தலாலா'வை வாங்கிக்கொள்ளுங்கள் என சிபாரிசும் செய்துள்ளார். கமலை பொறுத்தவரை சிபாரிசு என்ற வேலையே வைத்துக்கொள்ளமாட்டார். அப்படிப்படவரே மிஷ்கினுக்காக சிபாரிசு செய்திருப்பது பெரிய விஷயம்.
இதுவரை மிஷ்கினுடன் மூன்று சந்திப்புகளை நிகழ்த்தியுள்ள கமல், கதை பற்றி விவாதித்திருக்கிறார். கௌதம புத்தரின் இறப்புக்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள்தான் திரைக்கதையாக்கப்பட்டு வருகிறதாம். அந்த வருடத்தை கணக்கில் கொண்டே 'கி.மு.590' என்ற டைட்டிலை வைக்கப்போவதாக கோடம்பாக்கத்தில் செய்தி பரவுகிறது. இதற்காக புத்தர் சம்பந்தப்பட்ட புத்தகங்களை துணைக்கு வைத்து குறிப்பெடுத்து வருகிறாராம் மிஷ்கின்.
|