ஆர்யாவுடன் த்ரிஷா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா மருத்துவ கல்லூரி மாணவியாக நடிக்கிறார். படத்தின் க்ளைமாக்ஸில் அவர் இறந்து போவதாக கதை அமைக்கப்பட்டிருப்பது இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கும், த்ரிஷாவுக்கும் நடுவில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது.
'பீமா' படத்தில் த்ரிஷா இறந்து போவதாக காட்டியதை அவரது ரசிகர்களும், நண்பர்களும் விரும்பவில்லை. இனி இதுபோன்று நடிக்கக்கூடாது என அவர்கள் த்ரிஷாவை கேட்டுக் கொண்டனர். த்ரிஷாவின் அம்மாவும் பீமா க்ளைமாக்ஸில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து அது போன்ற காட்சியில் இனி நடிப்பதில்லை என முடிவெடுத்தார் த்ரிஷா. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே. 'சர்வம்' படத்திலேயே அப்படி நடிக்க வேண்டிய நிர்பந்தம். கதைக்கு இறந்து போவது போன்ற காட்சிதான் பொருத்தமாக இருக்கும் என விஷ்ணுவர்தன் தனது முடிவில் உறுதியாக இருக்கவே தனது தீர்மானத்தை தளர்த்திக் கொண்டார் த்ரிஷா.
இந்நிலையில் இருவிதமான க்ளைமாக்ஸை ஷூட் செய்திருக்கிறார் விஷ்ணுவர்தன். ஒன்று த்ரிஷா இறந்து விடுவதாக, இன்னொன்று அவர் உயிரோடு இருப்பதாக, ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து படத்தின் க்ளைமாக்ஸ் தீர்மானிக்கப்படுமாம்.
|