தூய தமிழில் பாட்டு எழுத முடியாது என நொண்டி சாக்கு சொல்பவர்கள் மத்தியில் படமே எடுத்தவர் சீமான். 'வாழ்த்துகள்' தோல்விக்கு தூய தமிழும் காரணம் என யாரோ சொன்னது காதில் விழ, பொங்கி விட்டார் சீமான்.
இவரது அடுத்தப் படம், ஆக்ஷ்ன் அதகளம். ஆனாலும், வசனங்கள் எல்லாம் தூய தமிழ்தான்.
'தம்பி'க்குப் பிறகு தனது சமூக கோபங்களை கோர்த்து 'பகலவன்' என்ற கதை உருவாக்கிவைத்திருந்தார் சீமான். மாதவன்தான் தொடர்ந்து வன்மையான படம் வேண்டாம் என மென்னையான காதல் படம் எடுக்க தூண்டியிருக்கிறார். அதன் விளைவுதான் 'வாழ்த்துகள்'.
மீண்டும் அதிரடி மனநிலைக்கு திரும்பியிருக்கும் சீமான் அனேகமாக பகலவன் கதையை படமாக்கலாம். வேறுகதை என்றாலும் அது காதல் கதையாக மட்டும் இருக்காது என்பதும், வசனம் தூய தமிழ் என்பது உறுதி!
|