தமிழ் திரையுலகுக்கும் ஒருவகையில் இன்று முக்கியமான தினம். நான்குப் படங்கள் இன்று ரிலீஸாகின்றன.
சுந்தர் சி. நடிப்பில் வெளிவந்த எந்தப் படமும் கமர்ஷியலாக தயாரிப்பாளிரின் கையை கடித்ததில்லை. அவரது 'சண்ட' இன்று வெளியாகிறது. நதியா, ராகிணி, விவேக், மாளவிகா என பிரபல நடிகர்கள். ஷக்தி சிதம்பரம் இயக்கம் நிச்சயவெற்றி என்ற நம்பிக்கையுடன் வெளியாகியுள்ளது.
'இன்பா' வில் ஷாம், சினேகா ஜோடி. ஆட்டோ டிரைவருக்கும் கல்லூரி மாணவிக்குமான காதல்தான் கதை.
இன்னொரு படம் பிரசன்னா, உதயதாரா நடித்திருக்கும் 'கண்ணும் கண்ணும்'. இப்படியொரு படம் இருப்பதே பலருக்கு தெரியாதது படத்தின் மைனஸ். வடிவேலு நடித்திருப்பது படத்தின் பிளஸ்.
சிவாஜியின் பேரன் (இவர்பெயரும் சிவாஜி) நடித்திருக்கும்படம் 'சிங்கக்குட்டி'. ஏ.வெங்கடேஷ் இயக்கம். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு. எப்படியும் ஜெயிப்பது என காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷ்ன் என அறுசுவை நிறைந்த பேமில பேக்காக வெளியாகியுள்ளது.
புனித வெள்ளியில் வெளியாகும் இந்த நான்கில், உயிர்த்தெழுவது எத்தனை என்பது மூன்று நாளில் தெரிந்து விடும்.
|