சீனாவில் 400 கோடி முதலீடு செய்யும் பிரமிட் சாய்மீரா
- 21.04.2008
By Amalan
சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பொழுதுபோக்கு மல்டிநேஷனல் நிறுவனமான பிரமிட் சாய்மீரா குழுமம், சீன மக்கள் குடியரசின், கலாச்சாரத்துறையின் கீழ் உள்ள, சீன சமுதாய இசை ஆராய்ச்சி குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக ஜியாங்சு பிரமிட் லாங்ஜி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.
|
|
|
இக்கூட்டாண்மையின்படி, சீனாவில், திரையரங்குகளை நடத்துவது, திரைப்படங்களை வினியோகம் செய்வது மற்றும் கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான பிற பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்துவது போன்ற பணிகளை ஜியாங்சு பிரமிட் லாங்ஜி குழுமம் மேற்கொள்ளும். மெயின்லேண்ட் சைனாவில் ஒரு நாளைக்கு ஒரு காட்சியை திரையிட திட்டமிட்டுள்ள இப்புதிய நிறுவனம், பின்னர் நான்-பாக்ஸ் அலுவலக வருவாயையும் உருவாக்கும்.
இது குறித்துப் பேசிய பிரமிட் சாய்மீரா குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் P.S.சாமிநாதன் "சீனாவிற்குள் கால் பதிக்கும் இந்தியாவின் முதல் பொழுதுபோக்கு நிறுவனமாக விளங்குவதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். மிகக் கட்டுப்பாடுகள் கொண்ட சீன பொழுதுபோக்குத்துறையில், இது எங்களுக்கு மிக முக்கியமானதொரு செயல்திட்டம் ஆகும். சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் செலவிடும் அளவானது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதன் வழியாகவும் மற்றும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு அந்நாட்டின் இளைய சமுதாயத்தினர் விரும்புவதன் வழியாகவும், சீன நாட்டில் பொழுதுபோக்குத் துறைக்கு வளமான எதிர்காலம் இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம்.
கண்காட்சி, விநியோகம், தொலைக்காட்சி கன்டென்டுகள், இசை மற்றும் தயாரிப்பு உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவைகளுக்காக பயன்படுத்தப்படும் வகையில் ஜியாங்சு பிரமிட் லாங்ஜீ குழுமத்தின் முதலாம் ஆண்டு செயல்பாட்டிலேயே ஏறக்குறைய ரூ.400 கோடிகளை முதலீடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இக்கூட்டாண்மையின் வழியாக, நாங்கள் பெரியளவிலான திரையரங்கு சங்கிலி வடிவமைப்பு, உணவு விடுதிகள், கேமிங் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு சேவைகளை உருவாக்குவோம். நாங்கள் சர்வதேச கன்டென்டுகளை சீனாவிற்கு கொண்டு வருவதோடு உள்ளூர் சீன கன்டென்டுகளையும் உலகம் முழுவதும் சந்தையாக்கல் செய்வோம். இந்த நுழைவானது எங்கள் குழுமத்தின் வளர்ந்து வரும் கண்காட்சி மற்றும் கன்டென்ட் வர்த்தகத்தை வலுப்படுத்துவதோடு, கூடிய விரைவில் எங்களை உலகின் மிகப்பெரிய கண்காட்சியாளராக உருவாக்கும்" என்றார்.
|