சின்னிஜெயந்த் இயக்கிய 'கானல்நீர்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ். நடித்தது ஒரு படம்தான் என்றாலும் கோடம்பாக்க சந்துபொந்துகளில் இவருக்கான விளம்பரங்கள் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான்.
அடுத்து கதாநாயகனாக நடித்துவரும் படம் 'நாயகன்'. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரித்திஷூக்கு ஜோடி அனிதா. தெலுங்கில் இப்போது பிஸியாகிவிட்ட அனிதா இதற்குமுன் 'சாமுராய்', 'வருஷமெல்லாம் வசந்தம்', 'சுக்ரன்' படங்களில் நடித்துள்ளார். தற்போது பெயரை மாற்றிக்கொண்டுள்ள அனிதா நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
சமீபத்தில் ரித்திஷ் - அனிதா பங்குபெறும் பாடல்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. 'நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா...' - என்று தொடங்கும் அப்பாடல்காட்சி பிரமாண்டமான செட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் இன்னொரு நாயகனாக ரமணாவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
|