ஜி கம்பெனி சார்பில் சங்கர் தயாரிக்கும் படம் 'சிலந்தி'. புதுமுக இயக்குனர் ஆதி இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாக முன்னாவும், கதாநாயகியாக மோனிகாவும் நடிக்கின்றனர். பெரும்பான்மையான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் பாடல் காட்சி மட்டும் படமாகி வருகிறது.
"சந்தன வேட்டைக்காரா மன்மத நாட்டு காடா மாய வலைய விரிச்சா மாட்டும் மானு நானா..." என்று தொடங்கும் இப்பாடலுக்கு எம்.கார்த்தி இசையமைக்க கவிஞர் ரமேஷ் பாடல் எழுதியுள்ளார்.
'கத்தால கண்ணாலே...' பாடலுக்கு நடனம் அமைத்த தினா நடனம் அமைத்துள்ளார்.
ரசிகர்களை குத்தாட்டம் போடவைக்கப்போகும் இப்பாடல்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. பல வண்ண நிறங்களில் மோனிகா சேலை கட்டி ஆடும் இப்பாடல் காட்சிக்காக செயற்கை அருவி ஒன்று உருவாக்கப்பட்டது.
அருவியில் நனைந்தபடி படு கிளாமராக ஆடியபோது பாறையின் இடையில் வழுக்கி விழுந்த மோனிகாவிற்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டதாம்.
|