|
|
| Hotnews! |
|
|
| [an error occurred while processing this directive]
|
Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
கதை கேளு கதை கேளு… ‘கோச்சடையான்’ கதை கேளு
- 21.06.2012
By Ram
‘கோச்சடையான்’ வேலைகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது. பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் ரஜினி ஹாங்காங் செல்லப் போகிறார்.
இந்நிலையில் கோச்சடையான் கதை பற்றி வெளியாகியுள்ள தகவலை உங்கள் காதில் போடுகிறோம்…..
படத்தில் ரஜினி, அப்பா - மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கதைப்படி ரஜினி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் பண்டைய தமிழ் மன்னர்கள். ரஜினி, ஜாக்கி ஷெராப் ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையில் சண்டை நடக்கிறது.
இந்த சண்டை அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ரஜினியின் மகனுக்கும் (ரஜினி), ஜாக்கி ஷெராப் மகனான ஆதிக்கும் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதில் ரஜினிக்கு உதவும் பாத்திரத்தில் சரத்குமார் வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்கிறார்கள். படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிந்துவிட்டாலும், தொழில்நுட்ப நேர்த்திக்காக இன்னும் சில மாதங்கள் கூட அவகாசம் தேவைப்படுகிறதாம். ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தபர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|