'தசாவதாரம்' படம் நல்ல வசூலுடன் திரையிட்ட இடங்களில் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது. பத்து அவதாரங்களை தாங்க்கூடிய கனமான கதையில்லை என்பது படத்தைப் பற்றிய பொதுவான விமர்சனம். வெகுசனங்கள் இந்த விமர்சனத்துடன் படத்தை ரசித்துவிட்டு செல்கின்றனர்.
சிறு பத்திரிகைகள் வட்டாரத்திலும், தலித் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியிலும் தசாவதாரம் வேறுசில கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளது. படத்தில் வரும் பிற கதாபாத்திரங்கள் அழகுடன் இருக்க, தலித் தலைவராக வரும் வின்சென்ட் பூவராகன் கதாபாத்திரம் மட்டும் கறுப்பாக அவலட்சணமாக காட்டப்பட்டுள்ளது. தலித் என்றால் கறுப்பாக அவலட்சணமாகதான் இருப்பாரா? படத்தின் இறுதியில் வில்லன் நீங்கலாக அனைவரும் உயிர் பிழைக்க பூவராகன் மட்டும் அநியாயமாக சாகடிக்கப்படுகிறார்.
கபிபுல்லா கான் வேடம் கோமாளியைப்போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் படிப்பறிவு இல்லாதவர்கள், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்கள் என்ற இந்துத்துவவாதிகளின் பிரச்சாரம் தசாவதாரத்தில் எதிரொலி்க்கிறது.
இதேபோல் இன்னும்பல குற்றச் சாட்டுகள் படம்மீது வைக்க்பபடுகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய கமல்ஹாசன், தசாவதாரம் அனைத்து தரப்பினரையும் கவரும் நோக்கில் எடுக்கப்பட்ட படம். அதில் சில தவறுகள் இருப்பது உண்மைதான் என்றார்.
அடுத்து தயாராகும் 'மர்மயோகி'யும் அனைத்து தரப்பினரையும் மனதில் வைத்தே உருவாக்கயிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
|