கவர்ச்சிப் படங்களுக்கான மார்க்கெட் இன்னும் குறையவில்லை. மலையாளத்தில் தயாராகும் ஷகிலா வகை படங்கள் தமிழ் நாட்டில் அமோக வரவேற்புடன் முன்பு ஓடின. மலையாளப் படங்களின் வரத்து மட்டுப்பட்டபோது அந்த இடத்தை இந்திப் படங்கள் பிடித்துக் கொண்டன. இந்தியில் தயாரான கிளாமர் திரைப் படங்கள் வரிசையாக தமிழில் 'டப்' செய்ய்ப்பட்டன. மாளவிகா உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து நடித்த 'சி யு அட் 9' திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்ய்ப்பட்டு நூறு நாட்கள் ஓடியது.
சமீபத்தில் இந்தியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜோதா அக்பர் உள்ளிட்ட எந்தப் படமும் லாபம் சம்பாதிக்கவில்லை. இதனால் குறைந்த முதலீட்டில் நிச்சயம் லாபம் தரும் என்ற நம்பிக்கையுள்ள, கிளாமர் திரைப்படங்களின் மீது வினியோகஸ்தர்களின் பார்வை பதிந்துள்ளது.
2005-ல் வெளியான மல்லிகா ஷெராவத், ரேகா நடித்த படமொன்று மல்லிகா காமினி என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது. இரு பெண்கள் பணக்காரர்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் படம் இது.
இதே வருடம் ஷில்பா ஷெட்டி, அவரது தங்கை ஷமிதா ஷெட்டி மற்றும் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான 'Fareb' தமிழில் 'காம சதிலீலாவதி' என்ற பெயரில் வெளிவருகிறது.
இந்த இருபடங்களும் முறை தவறிய உறவையும், ஏராளமான கிளாமர் காட்சிகளும் நிறைந்த 'ஏ' சான்றிதழ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கதைப்படங்கள் தராத லாபத்தை இந்த சதைப் படங்கள் தரும் என்பது வியாபாரிகளின் நம்பிக்கை.
நம்பிக்கை ஜெயித்தால் அது நமது ரசனையில் குற்றமாகவே இருக்கும்!
|