Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
- 21.07.2008

By Amalan
பிரம்மாண்ட விழா நடத்தி பந்தா பண்ணாமல் 'சத்யம்' பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. அதனையொட்டி இன்று நிருபர்களை சந்தித்தார் விஷால்.

Vishal

காத்ல கிசு கிசு பற்றிய கேள்விகள் வரமலா இருக்கும்? சொல்லிவைத்தாற்போல நிருபர்கள் இந்த கேள்வியை கோரஸாக எழுப்ப, அடுத்த நொடி ஆவேச பதிலை அள்ளிவீசத் தொடங்கினார் விஷால்.

"நாட்டில் எவ்வளவோ முக்கியமான செய்திகள் இருக்கின்றன. அரசு கவிழுமா, கவிழாதா? பெட்ரோல் விலை ஏறுமா, இறங்குமா? போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன்.  எனக்கும் காதல் வரும். அப்படி வந்தால் அதனை மறைக்கும் அவசியம் இல்லை. ஒருவேளை நான் காதலித்தால் பத்திரிகையாளர்களுக்குத்தான் முதலில் சொல்வேன்.

இந்த செய்தியை யார் பரப்புகிறார்கள் என்ற  ஆராய்சசியும் எனக்கு அவசியமற்றது. இதனைவைத்து எனக்கோ, படத்துக்கோ பிரபலம் தேடிக்கொள்ள வேண்டிய மட்டமான எண்ணமும் இல்லை. அப்படி கீழ்த்தரமான பப்ளிசிட்டி தேடிகொள்ள நினைத்திருந்தால் எனது முதல் படத்திலேயே தேடிக்கொண்டிருப்பேன். நடந்து முடிந்தவற்றை திரும்பி பார்க்கும் ஆளும் நானில்லை. அப்படி திரும்பி பார்த்தால் நான் ஒரே இடத்தில் நின்று விடுவேன். எனவே கடந்தவற்றை பேசி நேரத்தை போக்க நினைக்கவில்லை" என பொரிந்து தள்ளியவர், படம் பற்றி பேசத்தொடங்கினார்.

Vishal, Nayantara

"நான்கு வருடங்களுக்கு முன்பே இய்ககுனர் ராஜசேகர் என்னிடம் சொன்ன கதைதான் சத்யம். ரொம்ப சவாலான, கடினமான கேரக்டர் என்பதால் நீண்ட நாட்கள் காத்திருந்து இதனை எடுத்துவருகிறோம். கடந்த ஆறு மாதமாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வந்தேன்.

படத்தின் பட்ஜெட் 23 கோடியை தொட்டுவிட்டது. நாயகி நயன்தாரா இந்தப் பட்திற்காக நல்ல ஒத்துழைப்பை கொடுத்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பின்னணி இசை லைவ்வாக பதிவு செய்யப்படவுள்ளது".







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us