புதிய பொல்லாதவனை வெற்றிமாறன் இயக்குகிறார். இதுவொரு ஆக்ஷ்ன் திரைப்படம். "இந்தப் படத்துக்கும் ரஜினியின் 'பொல்லாதவன்' படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வேறு கதை, அது வேறு கதை" என விளக்கினார் வெற்றிமாறன். "படத்தில் ஹீரோயினாக தெலுங்கு நடிகை பூனம் பஜ்வா நடிக்கிறார்" என்றார் அவர் மேலும்.
'பரட்டை என்கிற அழகுசுந்தரம்' படத்துக்காக வளர்த்திருந்த நீண்ட முடியை பொல்லாதவனுக்காக குறைத்திருக்கிறார் தனுஷ். தாடி மீசையும் மிஸ்ஸிங். இந்த புது கெட்டப்பில் நாலு வயது குறைந்திருக்கிறது தனுஷுக்கு.
'வெயில்' படத்தில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கேமரா வேல்ராஜ். வி.டி. விஜயன் எடிட்டிங்.
படத்தின் ஆச்சரியம், தனுஷின் நரம்பு உடம்பில் புடைத்திருக்கும் மசில்கள். பொல்லாதவனுக்காக உடம்பை இரும்பாக்கியிருக்கிறார்.
பூனம் பஜ்வாவுக்கு தமிழில் இது முதல்படம் என்றாலும் தெலுங்கில் அவர் பழகிய முகம். படப்பிடிப்பில் சந்தித்தபோது சந்தோஷமாக இருந்தார். "தெலுங்கு பீல்டில் எனக்கென்று டீசன்டான ஒரு இடம் இருக்கு. தமிழிலும் அப்படியொரு இடத்தை கைப்பற்றுவேன்" என்றார்.
வெளி மாநிலத்தவர்கள் கைப்பற்றுவதற்குதானே தமிழ் திரையுலகம் இருக்கிறது. நல்லா கைப்பற்றுங்கள்!
|