சாமி இயக்கத்தில் ராஜ்கிரண்
- 22.03.2008
By JBR
'மிருகம்' படத்துக்குப் பிறகு சாமி இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் ராஜ்கிரண்.
|
|
|
'மிருகம்' படத்தில் தெனாவட்டான ஹீரோ பாத்திரத்தை உருவாக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சாமி, அதைவிட பவர்ஃபுல்லான கேரக்டர் ஒன்றை தனது அடுத்தப் படத்துக்காக உருவாக்கியுள்ளார். சாமி கணிப்புப்படி, ராஜ்கிரணைவி்ட்டால் அந்த கேரக்டரில் நடிக்க, தமிழ் சினிமாவிலேயே ஆளில்லை.
நல்ல வாய்ப்புக்காக ஒற்றைகால் கொக்காக காத்திருந்த ராஜ்கிரண், கதையை கேட்ட உடனே, கால்ஷீட்தர சம்மதித்துள்ளார். படத்தின் இன்னொரு வேடத்தில் 'மிருகம்' ஹீரோ ஆதி நடிக்கிறார்.
படத்தின் கதை ரெடி, கதாநாயர்கள் ரெடி, தயாரிப்பாளரைக்கூட தயார்ப்படுத்திவிட்டார் சாமி. பத்மப்ரியாவுக்கு பளார் கொடுத்த விவகாரத்தில், சாமிக்கு ஒருவருடம் படம் இயக்க தடை விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால், எல்லாம் தயாராக இருந்தும் சும்மா கையை கட்டிக் கொண்டிருக்கும் நிலை சாமிக்கு.
சாமிக்கு படம் இயக்கும் வரத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் விரைவி்ல் கொடுக்குமா?
|