இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட குஷ்பு, முப்பெரும் தேவியர் சிலைக்கு முன்னால் செருப்பு காலுடன் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
படத்தின் கதை சர்ச்சையை கிளப்பாது என்றாலும், அதனை தாங்கிக் கொள்ள நிறைய வல்லமை வேண்டும். படத்தில் பார்த்திபனும், சாயாசிங்கும் கணவன், மனைவி. ஒரு கட்டத்தில் கணவர் பார்த்திபனை பிரிகிறார் சாயாசிங். ஏன்?
வடிவேலு பாணியில் சொல்வதாக இருந்தால், அவர் ரொம்ப நல்லவராக இருக்கிறார். அதுதான் சாயசிங்குக்கு சங்கடமாக இருக்கிறது. கணவரைவிட்டு அவர் பிரிய இதுவே காரணம்! மதுமிதா படத்தை இயக்கியிருக்கிறார்.
ஏப்ரல் ஐந்தாம் தேதி படத்தின் ஆடியோ வெளியீடு. பரத்வாஜ் இசையமைப்பில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளனவாம். படத்துக்கு ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
|