அதிலும் ரஜினி படங்களுக்கே மவுசு. 'பில்லா' வைத் தொடர்ந்து டஜன் படங்கள் ரீ-மேக்குக்காக காத்திருக்கின்றன. குரூப் கம்பெனி கதிரேசன் ரஜினியின் 'மூன்றுமுகம்' படத்தின் ரீ-மேக் உரிமையை ஏற்கனவே வாங்கியுள்ளார்.
'பட்டியல்' சேகர் கமலின் 'கல்யாணராமன்' படத்தை ரீ-மேக் செய்வதாக இருந்தார். கமல் நடித்த வேடத்தில் லாரன்ஸ் நடிப்பதாக முடிவானது. நடுவில் 'அலிபாபா' ப்ராஜெக்ட் குறுக்கிட்டதால் 'கல்யாணராமன்' தற்காலிகமாக கைவிடப்பட்டது.
'பாண்டி'யில் நடித்துவரும் லாரன்ஸ் தனது ரீ-மேக் ஆசையை மட்டும் விட்டுவிடுவதாக இல்லை. 'பாண்டி'க்குப் பிறகு ரஜினியின் 'தம்பிக்கு எந்த ஊரு' ரீ-மேக்கில் நடிக்கிறார். கதையை இந்தக் காலத்துக்கு ஏற்றபடி மாற்றும் வேலையை லாரன்ஸே மேற்கொண்டிருக்கிறார்.
படத்தை யார் இயக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை!
|