பழைய பெயர்களுக்கு கட்டுப்பாடு
- 22.03.2008
By JBR
பழைய பாடல்கள ரீ-மிக்ஸ் செய்வதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
|
|
|
அதேபோன்று, பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைக்கவும் கட்டுப்பாடு விதித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.
'பில்லா', 'பொல்லாதவன்', 'நாயகன்', 'மர்மயோகி', 'மலைக்கள்வன்' என தமிழில் தயாராகும் பாதி படங்களுக்கு பழைய படங்களின் பெயர்களையே வைக்கின்றனர். இதற்கு, அந்தப் பழைய படங்களின் தயாரிப்பாளர்களும் அவர்களின் வாரிசுகளும் தொடர்ந்து எதி்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் அதேபடத்தை ரீ-மேக் செய்யும்போது, வேறொருவர் அநதப் படத்தின் பெயரை பயன்படுத்தியிருந்தால் என்ன செய்வது என்பது அவர்களின் கேள்வி.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கம் பழைய படங்களின் பெயர்களை வைக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. குறிப்பட்ட தயாரிப்பாளர் அல்லது அவர்களின் வாரிசுகளிடம் முறைப்படி அனுமதி வாங்கினால் மட்டுமே இனி பழைய படங்களின் பெயர்களை வைக்க முடியும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் அறிவித்துள்ளார்.
|