இந்திய சினிமாவில் இதுதான் இன்றுவரையிலான வழக்கம். விதிவிலக்கு ஐஸ்வர்யா ராய்! திருமணத்திற்குப் பிறகு, இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை எட்டிப் பிடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
உலகம் முழுவதும் இந்திப் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதால் நடிகர்களின் சம்பளமும் விண்ணை எட்டியிருக்கிறது. ஷாருக்கான 'ஓம் சாந்தி ஓம்' படத்துக்குப் பிறகு 30 கோடி ரூபாய் கேட்கிறார். ஒருபடத்துக்கு என்பது ரொம்ப முக்கியம். அக்ஷ்ய குமார் ஒரு படத்துக்கு கேட்பது இருபத்தைந்து கோடிகள். சல்மான்கானுக்கு இருபது கோடி.
இவர்களுடன் ஒப்பிடும் போது ஐஸ்வர்யா ராய்க்கு கம்மிதான். ஒருபடத்துக்கு நான்கு கோடிகள் கேட்கிறார், 'ரோபோ'வில் அவருக்குப் பேசப் பட்டிருக்கும் சம்பளம்தான், இதுவரை அவர் வாங்கியதிலேயே அதிகமாம். இவருக்கு அடுத்த இடத்தில் வருபவர், கரீனா கபூர். இரண்டரை முதல் மூன்று கோடிகள் கேட்கிறார்,
திருமணத்திற்குப் பிறகும் ஒரு நடிகை முதலிடத்தில் இருப்பது தேசிய சாதனைதான்!
|