சாய்முத்துசெல்வா இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் படம் 'நியூட்டனின் மூன்றாம் விதி'. "24மணி நேரத்திற்குள் உன்னை ஓட்டாண்டி ஆக்கி காட்டுகிறேன் பார்..." என்று கோடிஸ்வரனான விலலனிடம் சவால்விடும் நாயகன் அதை எப்படி நிறைவேற்றுகிறான் என்பதுதான் கதை.
படத்தின் கதாநாயகி இன்னும் முடிவாகாத நிலையில் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் பரபரப்பாக படமாகிவருகிறது. கடந்த சில நாட்களாக அண்ணா நகரில் சேஸிங் காட்சி ஒன்று படமாகிவருகிறது.
எஸ்.ஜே.சூர்யாவை வில்லன் ராஜ்கிருஷ்ணாவின் ஆட்கள் காரில் துரத்துவதுபோன்ற காட்சி போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் படமாக்கப்பட்டது. திடீரென கார்கள் சீறிப்பாய்ந்ததை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடத்தொடங்கினர். பின்னர் அது படப்பிடிப்பு என தெரிந்ததும் அமைதியாகினர்.
கதைப்படி எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரப்பான கேரக்டர் என்பதால் மேக்கப்பே இல்லாமல் நடிக்கிறாராம். பாடல்காட்சித்தவிர படம் முழுவதும் மேக்கப் இல்லாமலேயே நடிப்பது என முடிவெடுத்துள்ளாராம் சூர்யா. தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளாராம்.
|