Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கூடைப்பந்து சங்கத் தலைவரானார் நெப்போலியன்
- 22.04.2008

By Amalan

சென்னை ராயப்பேட்டையில் உள்ள டெக்கான் பிளாசா ஹோட்டலில் ஆறடிக்கு குறையாத உயர்ந்த மனிதர்கள் ஒன்றாக கூடியிருந்தனர். விசாரித்தபோதுதான் தெரிந்தது அவர்கள் கூடைப்பந்து வீரர்கள் என்பது.

Nepolian
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

நடிகர்களில் உயரமானவரான நெப்போலியனும் அந்தக் கூட்டத்தில் ஒருவராக இருந்தார். இவருக்கு இங்கென்ன வேலை என்று சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் எங்கள் சங்கத்தின் புதிய தலைவர் நெப்போலியன்தான் என்றபடி இனிப்பை கையில் திணித்தனர். ( நெப்போலியனும் கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார்).

இதற்கு முன் தலைவராக இருந்த தியானேஸ்வரனை நீக்கிவிட்டார்களாம். நெப்போலியன் புதிய தலைவரானதில் ஆளாளுக்கு சந்தோஷத்தில் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்ல, பழைய தலைவர் தியானேஸ்வரன் மீது சராமாரி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர்.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

கூடைப்பந்து சங்கத் தலைவராக தியானேஸ்வரனை நாம் அறிவோம். கூடைப்பந்து விளையாட்டையும், அதற்கான சங்கத்தையும், தன் வாயில் போட்டுக் கொண்ட கதையை அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

1983-இல் தமிழ்நாடு கூடைப்பந்துச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற தியானேஸ்வரன் அதிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாகச் சங்கத்தை தன் உடும்புப் பிடியில் வைத்துள்ளார். இதற்காக அவர் செய்துள்ள சூழ்ச்சிகளும் மோசடிகளும் ஏராளம். தன் பதவியை நிரந்தரமாக்கிக் கொள்வதற்காகவே அவர் சங்க விதிகளை திருத்தியுள்ளார்.

சங்கத்திற்கு சொந்தமான செல்வி.ஜெ.ஜெயலலிதா உள் விளையாட்டு அரங்கு உண்மையிலேயே கூடைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படவில்லை. திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு, கோடீஸ்வரத் திருமணங்கள், கேளிக்கைகள், இவற்றுக்கெல்லாம் கொழுத்த வாடகைக்கு விடப்ப்டுகிறது. விளையாட்டு வீரர்ரகள் தங்குவதற்கான ஓய்வு விடுதிகளும் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த வசூல் பணம் எதுவும் தமிழ்நாடு கூடைப் பந்துச் சங்கத்திற்கு போவதில்லை.

Nepolian

பல மாவட்டச் சங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தேர்தலே நடைபெறாமல் உள்ளது. குறிப்பாக சென்னை மாவட்டத்திற்கு கடந்த 20 ஆண்டுகளாகத் தேர்தலே நடைபெறவில்லை.

தியானேஸ்வரன் மகன் செந்தூரீஸ்வரனையே சங்கத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக நியமித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர்களை தியானேஸ்வரன் இந்த விளையாட்டை விட்டே வெளியேற்றிவி்ட்டார். திறமை மிக்க நடுவர்கள் பலரையும் அவர் நீக்கம் செய்து விட்டார்.

தியானேஸ்வரனால் தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டு செத்து விட்டது. தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் விளையாட்டு அரங்கம் அவரது குடும்ப சொத்தாகி விட்டது. அதை மீட்டுத் தமிழகத்தில் கூடைப்பந்து விளையாட்டிற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது அவசியமாகி விட்டது.

இதன் காரணமாக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக இன்று முதல் நடிகர் நெப்போலியனை ஒரு மனதாக தேர்ந்து எடுத்துள்ளோம்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us