தரணி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'குருவி'. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. வித்தியாசாகர் இசையில் பா.விஜய் எழுதிய 'மொழுமொழுன்னு யம்மா யம்மா...' என்ற பாடலில் தில்லையாடி வள்ளியம்மா என்ற பெயரில் சில வரிகள் இடம் பெறுகிறது...
" தில்லையாடி வள்ளியம்மா தில்லிருந்தா நில்லடிம்மா தில்லாலங்கடி ஆடுவமா திருட்டுத்தனம் பண்ணுவமா குத்தமா ஆத்தா குத்தமா..." இந்த வரிகள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காந்தியடிகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த தேசிய வீராங்கனையான தில்லையாடி வள்ளியம்மாவை இழிவுபடுத்துவதாக இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன என தமிழ் சங்கங்கள் பல போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளன.
ஆடியோ கேசட்டிலிருந்தும், படத்திலிருந்தும் இந்தப் பாடலை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ் விரும்பிகள் பலர் குரலெழுப்பியுள்ளனர்.
|