'சேது', 'நந்தா', 'பிதாமகன்' என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் பாலா. நான்காவதாக அவர் இயக்கிவரும் படம் 'நான் கடவுள்'. ஆரம்பத்திலிருந்தே ஆமை வேகத்தில் நகர்ந்த இதன் படப்பிடிப்பு இப்போதுதான் அரை கிணறு தாண்டியுள்ளது.
கதாநாயகன் மாற்றம், கதாநாயகிகள் மாற்றம் என ஏகப்பட்ட குளறுபடிகளில் சிலருக்கு கிடைத்தது ஏமாற்றம்தான். ஆர்யாவும் வேறு படங்களுக்கு போகாமல் தனது தாடி மீசையை பாலாவுக்காக நேந்துவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் பாலாவின் அடுத்த கமிட்மெண்டும் முடிவாகிவிட்டது. யெஸ். கமலஹாசன் நடிக்கும் படத்தை பாலா இயக்குகிறார். 'நான் கடவுள்' படம் தொடங்குவதற்கு முன்பே கமலஹாசனை சந்தித்து பேசிய பாலா, கமலை இயக்கப்போவதாகச் சொன்னார். அவரது ஆசை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது.
'தசாவதாரம்' படத்திற்கு் பிறகு 'மர்மயோகி' படத்தை இயக்கி நடிக்கும் கமல் அது முடிந்ததும் பாலாவுக்கான கால்ஷீட்டுக்களை ஒதுக்கவுள்ளாராம்.
படத்தை தயாரிக்கும் நிறுவனம், தலைப்பு, கதாநாயகி போன்ற எந்த விஷயங்களும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
|