தற்போது மாதவன் நடித்துவரும் படம் 'யாவரும் நலம்'. இப்படத்தில் நீத்து சந்திரா கதாநாயகியாக நடிக்கிறார். மாதவனின் இன்னொரு ஜோடியாக ஸ்ருதி கமல்ஹாசன் நடிக்கிறார் என ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தது. பின்னர் நிஷிகாந்த் இயக்கும் படத்தில் மாதவன் ஜோடியாக நடிக்கிறார் என செய்திகள் வந்தன.
இந்த இரு செய்திகளையும் மறுத்துவந்த மாதவன், தனது ஜோடியாக ஸ்ருதிகமல் நடிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் :-
நிஷிகாந்த் தமிழில் இயக்கும் படத்தில் எனக்கு ஜோடியாக ஸ்ருதி அறிமுகம் ஆகிறார். தற்போது இந்தியில் 'மும்பை மேரி ஜான்' என்ற படத்தை நிஷிகாந்த் முடித்துள்ளார். அதிலும் நான் நடித்திருக்கிறேன். அப்படம் ஜூனில் ரிலீஸ் ஆகிறது. அப்பணிகளில் அவர் இருப்பதால் தமிழ்ப் பட ஷூட்டிங் தள்ளிப்போகிறது. மற்றபடி இந்த படம் கைவிடப்பட்டதாகக் கூறுவது உண்மையல்ல.
'அலை' விக்ரம் இயக்கியுள்ள 'யாவரும் நலம்' படம் முடிந்து விட்டது. ஆகஸ்ட்டில் திரைக்கு வரும். அதே நேரத்தில் இந்தியிலும் இப்படம் திரைக்கு வரும். இதையடுத்து கே.ஆர்.ஜி.தயாரிப்பில் செல்வா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இது ஷாருக்கான் நடித்த 'எஸ்.பாஸ்' பட ரீ-மேக் அல்ல. அப்பட கதையின் சாராம்சம் மட்டும் இதில் இருக்கும்.
ஏற்கனவே நிஷிகாந்த் இயக்கத்தில் 'எவனோ ஒருவன்' படத்தில் மாதவன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|