சன் தொலைக்காட்சியும், ராடன் டி.வி.யும் இணைந்து 15 படங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் படமாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கிறார்.
பிரமாண்ட தயாரிப்பாக உருவாகவிருக்கும் இப்படத்தில் சரத்குமார் தந்தை - மகன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடம் போடுகிறார். ஒரு சரத்குமாருக்கு ஜோடி சினேகா. சரத் - சினேகா தம்பதியின் மகளாக ஸ்ரேயா நடிக்கிறாராம். படத்தில் சில காட்சிகளே வரும் ஸ்ரேயா இறந்து போவதுபோன்று கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை பிரஞ்ச் படமொன்றின் தழுவல் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான படப்பிடிப்புகள் ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகர்களின் படம் சூப்பர் ஹிட் ஆவது செண்டிமென்ட். அதிலும் சரத்குமார் காம்பினேஷனில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இரட்டை வேடப் படங்கள் எல்லாமே நூறு நாட்களை கடந்து ஓடியவை. இந்த வகையில் புதிய படமும் மெகா ஹிட்டாக அமையும் என ஆரூடம் கூறுகிறது தயாரிப்பு வட்டாராம்.
|