ரசிகர்கள் புடைசூழ மாலை மரியாதையுடன் அவர் தனது ஹேப்பி பர்த் டேயை கொண்டாட, இன்னொருபுறம் ரத்ததானம், ரசிகர் கோஷங்கள் என ஏரியாவை கலங்கடித்தார் தனுஷ். இதுவும் பிறந்த நாள் கொண்டாட்டம்தான்!
வருகிற 28-ம் தேதி தனுஷூக்கு பிறந்த நாள். அன்றைய தினம் படிக்காதவன் படத்திற்காக அவுட்டோரில் இருப்பார் தனுஷ். ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாதே.... அதனால் அட்வான்ஸாக நேற்று பிறந்த நாள் கொண்டாடினார்.
சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன நிலையில் முதல் முதலாக நேற்றுதான் நற்பணி என்ற வார்த்தை தனுஷ் வாயிலிருந்து உதிர்ந்தது. இதுவரை நேரடியாக நற்பணி செய்யாதவர் இனி முன்னின்று நற்பணி செய்ய உள்ளாராம் (அரசியலுக்கு வருவீர்களா?)
இதன் அச்சாரமாக தனுஷ் ரசிகர்கள் 200 பேர் ரத்ததானம் செய்தனர். ஹேப்பி பர்த்டே கோஷத்துடன் இளஞ்சிங்கம், தென்னாட்டு புரூஸ்லி கோஷமும் விண்ணை தொட்டது. நடுவில் சிலர் இளைய சூப்பர் ஸ்டார் என கோஷம் போட பதறிவிட்டார் சூப்பர் ஸ்டாரின் மருமகன்.
என்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டவர், எனக்கு பட்டமே தேவையில்லை என ஒரே கும்பிடாக போட, கோஷம் போட்டவர்கள் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்கள்.
|