கடலில் சென்று மீன்களை ஆராயும் ஸ்கூப் டைவிங் கற்றவர் காயத்ரி ஜெயராம். அந்தமானில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். அந்தமான் சென்றபோது அங்குள்ள ரிசார்ட்ஸ் அதிபர் ஒருவரை காதலித்தார். இப்போது காதலரை கரம்பிடிக்க போகிறார். புதிய பெயரின் நதிமூலம் இப்போது புரிந்திருக்கும்.
காயத்ரியின் வருங்கால கணவர் சமித் சென்னைவாசி. அந்தமானில் ரிசார்ட்ஸ் வைத்துள்ளார். இவர்கள் திருமணம் அந்தமானிலுள்ள ஹாவாலக் தீவின் 7-ம் எண் கடற்கரையில் அடுத்த மாதம் 13-ந் தேதி நடைபெறுகிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி பேர்புட் ரிசார்ட்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமா காயத்ரி ஜெயராமை மறந்தாலும் அவர் மறக்கவில்லை. ஜுன் மாதம் தனது திரையுலக நண்பர்களுக்கென்றே சென்னையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
மணமக்களுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
|