"படத்தில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும், ஆறு ஆல்பங்களுக்கும் இசையமைத்திருக்கும் எம்.கார்த்திக் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார். பின்னணி இசையிலும் பாடல்களிலும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார் கார்த்திக். பாடல்கள் குஷியாட்டம் போடவைக்கின்றது. இரண்டு பாடல்களும் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் பட்டியலில் இடம் பெறும் ரகம்.
இரண்டும் செல் போன்களில் ரிங்டோனாக வந்து கலக்கப் போவது உறுதி. நிச்சயமாக எல்லோராலும் ரசிக்கப்படும். எம்.கார்த்திக் மிகச் சிறந்த கமர்ஷியல் இசையமைப்பாளராக வருவதற்கான அத்தனை தகுதிகளும் உடையவர்" என்று அடித்துச் சொல்கிறார் இயக்குனர் ஆதி.
நாயகன் முன்னாவும், நாயகி மோனிகாவும், கொஞ்சி விளையாடும், 'இது காதல் மின்சாராமா...இல்லை காளை உற்சாகமா...' என்ற பாடல் காட்சி பாண்டிச்சேரியில் நான்கு நாட்கள் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை இயக்குனர் ஆதி எழுதியிருக்கிறார். பல இசைத் தொகுப்புகளில் பாடியிருக்கும் ரனைனா ரெட்டி, நித்தின்ராஜ் இருவரும் இணைந்து பாடியிருக்கின்றனர். சொக்கவைக்கும் இந்தப் பாடல் காட்சி காதல் ரசம் சொட்ட கவிதையாய் படமாக்கப்பட்டிருக்கிறது.
நாயகி மோனிகா, 60 அடி உயர அருவியில், கவர்ச்சி உடையில் கும்மாளம் போட்டிருக்கும்
'சந்தன வேட்டைக்காரா... இது மன்மத நாட்டுக் காடா...'
என்ற பாடலை புதுக்கவிஞர் ரமேஷ் எழுதியிருக்கிறார். ஸ்வேதா சுரேஷ் தன் போதைக் குரலில் பாடியிருக்கிறார். சமீபத்தில் சூப்பர் ஹிட்டான 'கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்ன...' என்ற 'அஞ்சாதே' படப்பாடலுக்கு நடனம் அமைத்த மாஸ்டர் தினா இந்தப் பாடலுக்கு செம ஸ்டைலான மூவ்மெண்ட்ஸ் கொடுத்து மோனிகாவை அசத்தலாக ஆட்டம் போட வைத்திருக்கிறார். பல நாட்கள் அருவியில் நனைந்து, மோனிகா போட்டிருக்கும் கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களை கிறங்கடிக்கும் என்பதில் சந்தோகம் இல்லை. இந்தப் பாடல் தனது அடுத்த அட்டாக்காக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மாஸ்டர் தினா.
பாடல் காட்சிகளை பவுசியாபாத்திமாவின் கேமரா அழகோவியமாய் படமாக்கியிருக்கிறது. எஸ்.சதீஷ்குரோசோவாவின் படத்தொகுப்பு பரவசப் படுத்தியிருக்கிறது.
'சிலந்தி' படத்தின் கதை எல்லோரையும் அதிரவைத்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. 48 மணி நேரத்தில் நடந்து முடியும் செம த்ரில்லான, விறுவிறுப்பான சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் 'சிலந்தி' படத்தை ஜி கம்பெனி சார்பில் விநியோகஸ்தர் பி.சங்கர் தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆதி இயக்கியிருக்கிறார்.
|