விஷால் நடித்த 'திமிரு' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தருண்கோபி. இப்படம் சூப்பர்ஹிட் ஆனாலும் படத்தை இயக்கியது விஷால்தான் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் நிலவி வந்தது. இரண்டாவதாக கிடைத்த வாய்ப்பு 'காளை'.
'காளை' படப்பிடிப்பின்போதே தருண்கோபிக்கு ஷாட் வைக்கத் தெரியவில்லை, பல காட்சிகளை சிம்புதான் இயக்குகிறார் என்ற செய்திகள் தருணுக்கு மைனஸ் பாயிண்டாக அமைந்தன. 'காளை' ப்ரிவியூவை பார்த்துவிட்டு தருணின் கன்னத்தில் டி.ராஜேந்தர் 'பளார்' கொடுத்தார் என்ற தகவலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி அடிமேல் அடிவாங்கிய தருண்கோபியின் ரோஷம் இப்போது பொத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.
'நானே இயக்கி, நானே நடித்து சூப்பர் இயக்குனராகவும் நடிகராகவும் அவதாரம் எடுத்துக்காட்டுகிறேன் பார்' என்பதைபோல புதுப்படம் ஒன்றை இயக்குகிறார்.
மதுரா டாக்கீஸ் என்னும் புதுப்பட நிறுவனம் சார்பில் அழகன் தயாரிக்கும் அப்படத்திற்கு 'காட்டுப்பய' என பெயரிடப்பட்டிருக்கிறது. ரெயில் தண்டவாளத்தில் பளபளக்கும் வீச்சரிவாளுடன் அமர்ந்தபடி கதாநாயகனாக போஸ் கொடுக்கும் தருண்கோபியின் கோபம் ஜெயித்துவிடும் என்றே தோன்றுகிறது.
'காட்டுப்பய' என்னும் தலைப்பும் யாரையோ திட்டுவதுபோலவும் இருக்கிறது.
|