'காதலில் விழுந்தேன்'. இது தேவயானியின் தம்பி நகுலன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம். வி.சேகரிடம் உதவி இயக்குனராக இருந்த பி.வி.பிரசாத் இப்படத்தை இய்ககுகிறார். விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.
படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் ஹிட்டாகிவிட்டது. குறிப்பாக 'தூய தமிழில்' எழுதப்பட்ட 'நாக்கு முக்கா...'என்று தொடங்கும் பாடல்தான் பட்டித்தொட்டியெங்கும் பாப்புலராகியுள்ளது.
இந்த பாடலுக்கு ஏற்கனவே நாயகன் நகுலன் நடனமாட படமாக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே எதிர்பார்க்காத வண்ணம் பாட்டு ஹிட்டாகிவிடவே, அந்த பாடலில் கிளாமரை தூக்கலாக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நமீதாவை குத்தாட்டம் போடவைத்து படமாக்கப் போகிறாராம் இயக்குனர். ஏற்கனவே இந்த படத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்று வாங்கிவிட்டது. படத்தில் கதாநாயகன், கதாநாயகி வேல்யூ இல்லையே என்று நல்ல விலை கொடுக்க யோசித்த டி.வி.நிறுவனத்திற்கு நாக்கு மூக்கா பாடல் நம்பிக்கை ஊட்டவே, நமீதாவை ஆடவைக்கும் ஐடியாவை இயக்குகனரிடம் சொல்லி படத்திற்கு நமீதா பலத்தையும் சேர்ததுள்ளதாம்.
என்ன...மூச்சிறைக்கவும் முட்டி தேயவும் ஆடிய நாயகன் நகுலன்தான் இதனால் அப்செட்.
|