பருத்தி வீரனுக்காக பிலிம்பேர் விருது பெற்ற கார்த்தியிடம் அடுத்த கட்டம் பற்றி கேட்டபோது கீழ்கண்டவாறு கூறினார்.
'பருத்தி வீரன்' படத்துக்காக பிலிம்பேர் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தில் குண்டாக இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படத்துக்காக தினமும் 6 மணி நேரம் பயிற்சி செய்து பத்து கிலோ எடை குறைந்தேன்.
கேரக்டருக்கு தேவை என்பதால் ஒரளவு குண்டாக இருந்தேன். அதில் இருந்த கெட் அப்பிலேயே செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' படததிலும் நடித்துள்ளேன். இது ஆக்ஷ்ன் படம். இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறேன். இப்படத்துக்காக எடையை குறைக்கிறேன்.
அமெரிக்காவில் படித்தபோது பர்கர், பிட்ஸா போன்ற உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டேன். இதனால் குண்டாகிவிட்டேன். அண்ணன் சூர்யாவைப்போல சிக்ஸ் பேக் உடற்கட்டு உருவாக்கும் எண்ணமில்லை. பருத்தி வீரன் நல்ல பெயர் கொடுத்தாலும் தொடர்ந்து அதுபோல சீரியஸ் வேடங்களில் நடிக்க மாட்டேன். படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புகிறேன்.
ஹீரோயின்களுடன் டூயட் பாடுவது, ஆக்ஷ்ன் படங்களில் நடிப்பது பிடிக்கும். இனி அந்த பாணியில் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்வேன்."
|