குடும்ப பின்னணியில், உறவுகளின் சிக்கல்களையும், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் ஆக்ஷ்னோடு சொல்லும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
கதாநாயகன் பிரதீப், 'சிலந்தி' மோனிகா, சௌந்தர்யா, அர்ச்சனா, கிரண் என படத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சமாச்சாரங்களும் உண்டாம்.
'அகராதி' என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கிறது. சமுதாயத்தை மதிக்கமல், தன் போக்கில் திரிபவனும் அகராதியே. வரம்பு மீறி வார்த்தைகளை பேசுபவனும் அகராதியே, யாருக்கும் கட்டுப்படாத காற்றாய் திரிபவனும் அகராதியே. எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து வாழ்பவனும் அகராதியே. மொழி பெயர்ப்பும் அகராதியே. விளங்காத விஷயங்களுக்கு விளக்கம் கூறுவதும் அகராதியே, மொத்தத்தில் தலைகனமும் அகராதிதான். இலக்கணமும் அகராதிதான.
'இரவில் ஒரு வானவில்' கதையை 'அகராதியாய்' ஆக்கியது இயக்குனர் நாகா வெங்கடேஷ். இவரது பார்வையில் ராஜேஷ்குமாரின் கதையை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எண்ணூர் துறைமுகத்தில் படம் பிடிக்கப்பட்ட சண்டைக்காட்சி படத்தின் ஆரம்ப அசத்தலாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.
படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்கள் வெவ்வேறு தளத்தில் வித்தியாசமாக அமைக்கப்பட்டவை. 'ஜிகிடு ஜிகிடு பம்பம்...' என்ற பாடல் வாளமீன், கத்தாழ பாடல்களை பின்னுக்கு தள்ளிவிடுமளவிற்கு படமாக்கப்பட்டுள்ளதாம்.
|